தோத்திரப்‌ பண்டிகை ஆசரி

தோத்திரப்‌ பண்டிகை ஆசரிப்போமே,
தூயகம்‌ ஊறிய பக்தியால்‌ நாமே. - தோத்திர

சரணங்கள்‌

1. பாத்திரம்‌ இதுவெனப்‌ பகர்‌உடல்‌ பொருளாவி
பரமனுக்‌ கர்ப்பணஞ்செய்‌ பரிவு நிறைய மேவித்‌. - தோத்திர

2. பனித்துளி நிலத்தினைப்‌ பண்படுத்தினதன்றே
பகருமுகில்‌ கொழுமைப்‌ படுத்திய தெண்ணிநன்றே. - தோத்திர

3. கடவுளே பயிருக்குக்‌ கனமழை பெய்வித்தாரே,
காங்கையால்‌ கதிர்வளம்‌ கதிக்கவும்‌ உய்வித்தாரே. - தோத்திர

4. நெஞ்சத்தில்‌ தெய்வனுன்பாம்‌ நிதிநிகர்‌ விதைபெய்து
நித்திய சமாதானம்‌ நிறுவ விண்ணப்பம்‌ செய்து. - தோத்திர

5. இறைவன்‌ இரத்தக்‌ கையால்‌ இரட்சண்யம்‌ அருள்வித்தை
இதயத்தில்‌ விதைத்ததற்‌ கின்குணப்‌ பலன்வைத்துத்‌ - தோத்திர

- சா. மாசிலாமணி

Start Downloading Your Apps