பாதம்‌ வந்தனமே வரப்பிர பவை

பாதம்‌ வந்தனமே! - வரப்பிர
சாதம்‌ எந்தனமே.

சரணங்கள்‌

1. ஆதரவொடு வேதமே விடுத்‌
தாளும்‌ அற்புதனே, திவ்ய சுதனே, கிருபைப்‌
பதனே, சுசிகர - பாதம்‌

2. பேசுதற்கரிதான துத்திய
பெருமைக்‌ கோமானே, மெய்ச்‌ சீமானே, அருள்‌
கோனே, சுசிகர - பாதம்‌

3. ஞானமாய்‌ நரர்க்‌ கான ஜீவனை
நல்கிய சீலா, மனு வேலா, துரை பாலா, சுசிகர - பாதம்‌

4. தீவினை தொலைத்‌ தாவியே மிகுத்‌
தேவும்‌ இங்கிதமே, என்‌ ரஞ்சிதமே நீ
சந்ததமே! சுசிகர. - பாதம்‌

5. தாசரை விசுவாசமாய்க்‌ கையில்‌
தாங்குபகாரா, அதிகாரா, கன தீரா சுசிகர - பாதம்‌

- ஆ. அல்வின்‌

Start Downloading Your Apps