வந்தனம்‌ வந்தனமே தேவ

வந்தனம்‌, வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே! - இது
வரையில்‌ எமையே வளமாய்க்‌ காத்த எம்துரையே, மிகத்‌ தந்தனம்‌.

சரணங்கள்‌

1. சந்ததஞ்சந்ததமே, எங்கள்‌ தகுநன்றிக்‌ கடையாளமே,- நாங்கள்‌
தாழ்ந்து வீழ்ந்து சரணஞ்‌ செய்கையில்‌ தயைகூர்‌, சுரர்பதியே.

2. சருவ வியாபகமும்‌ எமைச்‌ சார்ந்து தற்காத்ததுவே, - எங்கள்‌
சாமி, பணிவாய்‌ நேமி துதிபுகழ்‌ தந்தனமே நிதமே!

3. சருவ வல்லபமதும்‌ எமைத்‌ தாங்கினதும்‌ பெரிதே, - சத்ய
சருவேசுரனே, கிருபாகரனே, உன்சருவத்துக்குந்‌ துதியே.

4. உன்தன்‌ சர்வ ஞானமும்‌ எங்களுள்ளிந்திரியம்‌ யாவையும்‌
பார்த்தால்‌
ஒப்பே தருங்‌ காவலே உன்னருளுக்கோ தரும்‌ புகழ்‌ துதி துதியே

5. மாறாப்‌ பூரணனே, எல்லா வருடங்களிலும்‌ எத்தனை-உன்றன்‌
வாக்குத்‌ தவறாதருளிப்‌ பொழிந்திட்ட வல்லாவிக்குந்‌ துதியே.
- அருள்திரு. வே: மாசிலாமணி

Start Downloading Your Apps