பணியா யொசிரசே படியோர்

பணியா யொசிரசே, படியோர்‌ பவமே சுமந்து
அணியா முண்முடி பூண்ட சிரசனைப்‌-பணியாயோ

2. நெற்றியே நிமிராய்‌, நீதி யாயநடுத்தீர்ப்பில்‌
வெற்றி யுதிரச்‌ சிலுவைக்‌ குறிபூணும்‌-நெற்றி

3. கேண்மினோ செவிகாள்‌, கிடைக்‌ காதரும்‌ வாசகனார்‌
சேணும்‌ மண்ணும்‌ புகழுரை சொற்றதைக்‌-கேண்‌

4. காணீரோ விழிகாள்‌, கண்ணி ரருவிபெருக
தோணெரு சாலம்‌ துயர்கண்டழு தோனைக்‌- கேண்‌

5. உதடே முத்திசெய்யாய்‌, உனைத்தேடி அலைந்துநொந்து,
உதிரஞ்‌ சொரிந்த தூயசெம்‌ பாதத்தை-உதடே

6. துதியாயோ நாவே, தூயதூதர்‌ சேராபீன்கள்‌
நிதமும்‌ சூழ்ந்தஞ்‌ சலிசெய்யும்‌ நாதனைத்‌-துதி

7. கண்டமே நீபாடாய்‌, கதிகண்ட நரர்கணங்கள்‌
அண்டம்‌ புகழ நவகீதம்‌ பாடுவர்‌-கண்டமே

8. நெஞ்சே நீயணையாய்‌, நேசசீடனும்‌, பாலகரும்‌
அஞ்சா துய்ய வணைத்திடு மார்பனை-நெஞ்சே

9. சேவிப்பீர்‌ செங்கரங்காள்‌, தீயர்‌ நல்லாரெவரெவர்க்கும்‌
தாவிப்பணி செய்து யர்த்துங்‌ கரத்தனைச்‌-சேவி

10. கால்காள்‌ ஓடுங்களே, கானான்‌ தேசத்திசைகளெங்கும்‌
மேலாம்‌ ஞானம்‌ விதைத்தவர்‌ சேவைக்குக்‌-கால்காள்‌

11. பாதங்களே நடமின்‌, படுபாவி கண்ணீராடிக்‌
கோதல கைச்சிரம்‌ நைத்த வடிகளில்‌-பாதங்களே

-அருள்திரு. ஜி. சே. வேதநாயகம்‌

Start Downloading Your Apps