அருளின் மா மழைபெய்யும்

1. அருளின் மா மழைபெய்யும்
என்று வாக்களித்தோரே
மாரியாய் பெய்திடச் செய்யும்
லோகத்தின் ரட்சகரே

தேவன்பின் வெள்ளம்
தேவன்பின் வெள்ளம் தேவை
கொஞ்சம் ருசித்த என் உள்ளம்
கெஞ்சுதே இன்னும் தேவை

2. கற்பாறைபோல் பாவி உள்ளம்
கடினப்பட்டதையோ
பரிசுத்தாவியின் வெள்ளம்
கரைக்க வல்லதையோ - தேவன்பின்

3. வெட்டாந்தரை நிலந்தானும்
ஏதேன் போல் மாறுமென்றீர்
சாபத்துள்ளான முட்பூண்டு
கேதுருவாகுமென்றீர் - தேவன்பின்

4. தேசத்தின் இருளைப்பாரும்
லோகத்தின் மெய்த்தீபமே
ஆவியின் அருளைத்தாரும்
மனமாற்ற வல்லவரே - தேவன்பின்

5. ஏழை என் குறைகள் யாவும்
தீர்த்திடும் வல்லவரே
யுத்தத்தில் முன் செல்ல ஏவும்
சேனைத் தளகர்த்தரே- தேவன்பின்

Start Downloading Your Apps