தினமே நானுனைத்‌ தேடிப்பணியச்

தினமே நானுனைத்‌ தேடிப்பணியச்‌
செயும்துணையே நித்ய ஏக தெய்வமே.
அனுபல்லவி

மனநிலை தவறி மருகினேன்‌ நானே.
மாசிலானே அனுகூலநற்‌ கோனே. - தின

சரணங்கள்‌

1. அருள்‌ நாயகனே, அம்பரத்‌ தீசா,
ஆதியாய்‌ நின்றபேர்‌ அருள்நிறை பாசா,
மருள்பவ நாசா, மனுக்குல ராசா,
மகிமை யடைந்தமா மகத்துவ நேசா! - தின

2. செத்தேன்‌, எனக்குன்‌ ஜீவன்‌ அளித்தாய்‌,
தீயனென்‌ மேல்‌ திருத்‌ தீர்த்தம்‌ தெளித்தாய்‌,
முத்தேயென்‌ நன்மைக்‌ காக மரித்தாய்‌,
மோதிய தீவினை யாவும்‌ அழித்தாய்‌. - தின

3. திரளென்‌ பாவங்கள்‌ தீர்த்திட வாராய்‌,
தீமை மறந்துநான்‌ சீர்பெறக்கூராய்‌,
கரள்‌ குணமாற்றிக்‌ கனிந்தெனைச்‌ சேராய்‌,
களிப்புடன்‌ பாடிடக்‌ கறுணைக்கண்‌ பாராய்‌. - தின

- அருள்திரு. சா. பரமானந்தம்‌

Start Downloading Your Apps