இயேசு எனக்காக சிலுவையில்

இயேசு எனக்காக சிலுவையில் மாண்டீரே!

சரணங்கள்

1. பாவி எனக்காக தேவே நீர்
ஆவியை விட்டீரோ!
கோரமாய்க் குருதி வடித்தீரோ - இயேசு
பாரத்தால் துவண்டு துடித்தீரோ! - இயேசு

2. நீச பாவச் செயல்களில்
ஈசனே உழன்றேனே!
பாவப் பாரத்தால் நான் சோர்வுற்றேன்
சிலுவையண்டை தாழ்ந்து வாரேன் நான்- இயேசு

3. தலை கைகள் கால்கள் விலா
நிலையில்லா வெள்ளமாய்
செந்நீர் வடிப்பதென் பாவமே - இவ்
வன்பிற்குப் பாத்திரன் அல்ல நான்- இயேசு

4. ஐயோ பாவி என்னை தேவா
உய்விக்க வந்தீரோ!
பாபமே ஆனீரோ பாவிக்காய் - இயேசு
சாபமே ஏற்றீரோ என்னால் நீர்- இயேசு

5. என் தேவனே தேவனே
ஏனென்னைக் கைவிட்டீர்
என் கைப்பற்றவல்லோ கைவிட்டீர் - இயேசு
கண்ணீரிவ்வன்பிற் கீடாகுமோ - இயேசு

6. இந்தக் கோரக் காட்சி காணத்
தந்தை சகியாமல்
மைந்தனை விட்டு நீர் திரும்பி - தேவா
இந்தப் பாவியைக் கண்ணோக்கினீர் - இயேசு

7. ஐயோ என் செய்வேன் பாவி நான்
உள்ளம் உடைவேனோ?
கண்ணீர் சொரிவேனோ என் இயேசுவே - ஐந்து
காயங்கள் கழுவக் கரைந்து- இயேசு

Start Downloading Your Apps