உன்னையே வெறுத்துவிட்டால்

1. உன்னையே வெறுத்துவிட்டால்
ஊழியம் செய்திடலாம்
சுயத்தை சாகடித்தால்
சுகமாய் வாழ்ந்திடலாம்

2. சிலுவை சுமப்பதனால்
சிந்தையே மாறிவிடும்
நீடிய பொறுமை வரும்
நிரந்தர அமைதி வரும்- உன்னையே

3. பெயர் புகழ் எல்லாமே
இயேசுவின் நாமத்திற்கே
கிறிஸ்து வளரட்டுமே
நமது மறையட்டுமே- உன்னையே

4. நாளைய தினம் குறித்து
கலங்காதே மகனே (மகளே)
இதுவரை காத்த தெய்வம்
இனியும் நடத்திடுவார்- உன்னையே

5. சேர்த்து வைக்காதே
திருடன் பறித்திடுவான்
கொடுத்திடு கர்த்தருக்கே
குறைவின்றி காத்திடுவார்- உன்னையே

6. தன்னலம் நோக்காமல்
பிறர் நலம் தேடிடுவோம்
இயேசுவில் இருந்த சிந்தை
என்றுமே இருக்கட்டுமே- உன்னையே

Start Downloading Your Apps