தெய்வ கிருபையைத் தேட

1. தெய்வ கிருபையைத் தேட
நீ போராடிக்கொண்டிரு;
ஆவி பாரமின்றி ஏற
நன்றாய் ஜாக்கிரதைப் படு.

2. வாசல் மிகவும் இடுக்கம்,
தாழ்மையாகி உட்படு;
ஜீவ வழியோ நெருக்கம்,
லோக நேசத்தை விடு.

3. சேவகத்தில் பின் வாங்காமல்
ராஜ்ஜியத்துக்குட்படு;
பேய் எதிர்த்தால், தளராமல்
நின்று, ஏகிக்கொண்டிரு.

4. வேண்டுதலினால் போராடி,
ஆண்டவரின் தயவு
காணுமட்டுக்கும் மன்றாடி,
கூப்பிட்டுக் கொண்டேயிரு.

5. கர்த்தர் உன்னைத் தயவோடே
ஏற்றுக்கொண்டபிறகு,
பாவம் உன்னிலே வேரோடே
செத்ததென்றெண்ணாதிரு.

6. ஜீவனுள்ள நாள்மட்டாக
மோசங்கள் இருக்குமே;
திகிலும் பயமுமாக
உன் ரட்சிப்பைக் காப்பாயே.

7. நீ முடியைப் பெற்றிருந்தால்,
கெட்டியாய்ப் பிடித்திரு;
பின்னடைந்து போய் விழுந்தால்,
மோசம் மா பெரியது.

8. மாய்கையை நோக்காதே விட்டு,
ஞான ஆயுதங்களை
ராவும் பகலும் பிடித்து,
நிர்விசாரத்தைப் பகை.

(2ஆம் பாகம்)

1. இதை நாம் நினைப்போமாக;
ஆ, நற்சேவகரைப்போல்
பந்தயம் பெறுமட்டாக
ஏகிப்போவோம், வாருங்கள்.

2. லோகம் பேயின் வசமாமே,
சோதோம் வேகும் அல்லவோ?
தப்பிப்போக நேரமாமே,
தீவிரிக்க வேண்டாமோ?

3. தப்பத்தக்கதாக ஓடு,
ஆத்துமாவே, தீவிரி;
பாரத்தை இறக்கிப் போடு,
தெய்வச் சொல்லைக் கவனி.

4. அக்ரம சோதோமை விட்டு,
அதன் செக்கையை வெறு;
தப்பிப்போகத் தீவிரித்து,
நல்லொதுக்குக்குட்படு.

5. நீ பின்னானதைப நாடாமல்,
முன்னிருப்பதைப் பிடி;
இச்சை வைத்தழுக்காகாமல்,
தெய்வ சிந்தையைத் தரி.

6. வென்றவரை மோட்சத்துக்கு
சேர்த்துயர்த்துவதற்கு
வரும் மணவாளனுக்கு
வாஞ்சையாகக் காத்திரு.

7. ஓடி அவரைச் சந்தித்து,
"ஜீவனே, முள் காட்டைப்போல்
காணும் இப்புவியை விட்டு,
என்னைச்சேரும்," என்றுசொல்.

Start Downloading Your Apps