தேவ லோகமதில்‌ பவ்ய

தேவ லோகமதில்‌
சேவிப்பார்‌ தூயவர்கள்‌.

மாவலராகிய தேவன்றன்‌ பலத்தால்‌-ரீ
பூவினில்‌ ஜீவித்துப்‌ புகழுறும்‌ ஜெயம்‌ பெற்றார்‌. - தேவ

சரணங்கள்‌

1. வானமண்டலப்‌ பொல்லா ஆவியின்‌ சேனையோடும்‌-பல
மான துரைத்தனம்‌, அதிகாரம்‌, பிரபஞ்ச
அதிபதியிவர்களோடும்‌
ஞானமாய்த்‌ தேவ சர்வாயுதம்‌ தரித்து,-ரீ-
நலமுடன்‌ போராடி உலகினில்‌ ஜெயங்‌ கொண்டார்‌. - தேவ

2. பட்டயம்‌, நிர்வாணம்‌, பசி, நாச மோசங்களும்‌,-மா
பாடு, வியாகுலத்தோடு, உபத்ரவம்‌, பஞ்சமும்‌ மிஞ்சி வந்தும்‌,
துட்டர்கள்‌ கிட்டினும்‌ மட்டில்லா அன்பரால்‌-ரீ-
துணிவுடன்‌ முற்றிலும்‌ ஜெயித்த விசுவாசிகள்‌. - தேவ

3, பாரத்தையும்‌, தமை நெஞ்கிய பாவத்தையும்‌,-தள்ளிப்‌
பட்சமுறும்‌ யேசுரட்சகர்மீது தம்‌ பார்வையை வைத்து என்றும்‌
வீரமாய்‌ ஓடியே வெற்றி சிறந்தவர்‌,-ரீ-
வேகும்‌ அக்கினியின்‌ உக்கிரம்‌ அவித்தவர்‌. - தேவ

4. ஜெயங்‌ கொள்ளுவோர்‌ பரதீசினில்‌ வீற்றிருப்பார்‌,-வாடா
ஜீவகிரீடம்‌ அணிந்தாளுகை செய்வார்‌, ஜீவகனி புசிப்பார்‌,
வியப்புறு புது நாமம்‌, வெள்ளுடை பெற்றுமே-ரீ-
விடிவெள்ளியாய்‌ நித்யம்‌ விளங்கி ஜொலித்திடுவார்‌. - தேவ

- அருள்திரு. வே. சந்தியாகு

Start Downloading Your Apps