இரட்டிப்பான நன்மைகள் தந்திட

இரட்டிப்பான நன்மைகள் தந்திட
இயேசு வாக்களித்தாரே

அனுபல்லவி

முன்மாரி மேல் விண் மாறி மழையே
உன்னதத்தினின்று வந்திறங்குதே- இரட்டிப்பான

1. பெலத்தின் மேலே மா பெலனே
புது பெலன் நாம் பெற்றிட
சால்வை தனை எலிசா அடைந்தாற்போல்
சோர்வின்றி பெலன் என்றும் நாடுவோம்- இரட்டிப்பான

2. கிருபையின் மேல் மா கிருபை
கர்த்தரிடம் நாம் பெற்றிட
ஸ்திரீகளுக்குள் மரியாள் பெற்ற பாக்யம்
ஸ்தோத்திரம் பாடி என்றும் தேடுவோம்- இரட்டிப்பான

3. ஜெயத்தின் மேலே மா ஜெயமே
ஜெய தொனியாய்ப் பெற்றிட
போர் முனையில் சிறு தாவீது போல
போர் வீரராக என்றும் ஜெபிப்போம் - இரட்டிப்பான

4. நம்பிக்கையின் மேல் நம்பிக்கை
நல்விசுவாசம் பெற்றிட
ஆதி அப்போஸ்தலர்கள் காலம் நடந்த
அற்புதங்கள் நாம் என்றும் காணுவோம்- இரட்டிப்பான

5. பரிசுத்தம் மேல் பரிசுத்தம்
பங்கமில்லாமல் பெற்றிட
நீதியின் சூரியன் இயேசுவுடனே
நீதி அணிந்து என்றும் ஆளுவோம்- இரட்டிப்பான

6. மகிமையின் மேல் மா மகிமை
மறு ரூபம் நாம் பெற்றிட
கண்ணிமை நேரத்திலே பறந்தேகி
கர்த்தருடன் நாம் என்றும் வாழுவோம் - இரட்டிப்பான

Start Downloading Your Apps