இயேசுவின் மகிமையைப் பாடுவோம்

இயேசுவின் மகிமையைப் பாடுவோம்
இயேசுவின் மகிமைக்காய் வாழுவோம் (2)
இயேசுவே எங்கள் மேன்மையே
இயேசுவே எங்கள் மகிமையே

1. இயேசுவின் பெயரைச் சொல்லவே
பேய்களும் பறந்தோடுதே
இயேசுவின் நாமம் கூறவே
நோய்களும் குணமாகுதே - இயேசுவின்

2. இயேசுவின் வேதம் படிக்கவே
பேதையும் ஞானியாகிறான்
இயேசுவின் பாதை நடக்கவே
பாவியும் தூய்மை அடைகிறான்- இயேசுவின்

3. இயேசுவின் சிலுவை காணவே
கல்மனம் கரைந்து உருகுதே
இயேசுவின் இரத்தம் சொல்லவே
துன்பமும் நீங்கிப் போகுதே - இயேசுவின்

Start Downloading Your Apps