ஓ இயேசு உமதன்பு எத்தனை

ஓ இயேசு உமதன்பு எத்தனை பெரியது
ஆகாயம் பூமி மலை ஆழிகளுக்கெல்லாம் பெரியது

1. அளவில்லா ஆனந்தத்தால் அகம் நிறைந்தது
ஆண்டவர் காரியங்கள் அதிகம் சிறந்தது
அன்றாடம் காலை மாலையிலும் துதிக்க உயர்ந்தது
துதிக்க உயர்ந்தது - ஓ யேசு

2. சங்கட சமங்களில் மங்கியே வாடுகிறேன்
துங்கனே இறங்குமென ஏய்ங்கியே நாடுகிறேன்
பங்கமில்லாமல் பதிலளிப்பேன் என்றதால் பாடுகிறேன்
என்றதால் பாடுகிறேன் - ஓ யேசு

3. இருளாம் பள்ளத்தாக்கில் மருகியே நடந்தாலும்
அருமேந்தன் மேய்ப்பராய் அருகிலிருப்பதாலும்
கருணையா என்னைக் கரம் பிடித்தே
கர்த்தரே காப்பதாலும் கர்த்தரே காப்பதாலும் - ஓ யேசு

4. குறைவுள்ளோனானாலும் கூடவே இருக்கிறீர்
நிறைவாம் புல் தரைகளில் மெதுவாகவே நடத்துகிறீர்
இறைவனாம் யேசு எல்லாவற்றிலும்
திருப்தியாக்குகிறீர், திருப்தியாக்குகிறீர் - ஓ யேசு

5. தேவனுடைய வீட்டில் சித்தப்படி துதிப்பேன்
ஏக இருதயத்துடனே என்றுமதை மதிப்பேன்
ஆராதிக்க அருகராம் யேசு அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா ஆமென்- ஓ யேசு

Start Downloading Your Apps