தேசமே பயப்படாதே

தேசமே பயப்படாதே
மகிழ்ந்து களிகூரு
மன்னவர் கர்த்தர் உந்தனுக்கே
மாபெரும் காரியம் செயதிடுவார்

1. செழிப்பான புது வாழ்வு
தேவனே அருளுவார்
சுக வாழ்வு சமாதானம்
சந்தோஷம் தந்திடுவார் (2)- தேசமே

2. மலைபோல வருவதெல்லாம்
பனிபோல் மறைந்திடுமே
உன்னதரின் கிருபைகளும்
உந்தனைச் சூழ்ந்திடுமே (2)- தேசமே

3. தேவனுடன் உறவுகொண்டு
தினம் தினம் வாழந்திடுவாய்
இம்மையிலும் மறுமையிலும்
இன்பத்தை ருசித்திடுவாய் (2) - தேசமே

Start Downloading Your Apps