தேவசேனை வானமீது

1. தேவசேனை வானமீது கோடி கோடியாகத் தோன்றும்
பலகோடித் திரள் கூடிக் குகை தேடி வேகம் ஓடும்
விண் மீன்கள் இடம் மாறிப் பாரெங்கும் வந்து கொட்டும்
நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன்

பல்லவி

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)

2. ஐந்து கண்டம் தன்னில் ஆளும் ஆட்சியாவும் அற்றுப்போகும்
இருள் சூழும் இடி முழங்கும் கூச்சல் கேட்டு கண்ணீர் சிந்தும்
தூயர் கூட்டம் சுத்த உள்ளம் சாட்சி பாடல் எங்கும் கேட்கும்
நானும் ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன்- அல்

3. கடல் குமுறும் கரை உடையும் கப்பல் கவிழும் பெரும் நாசம்
போக்குவரத்து யாவும் நிற்கும் இனி உலகம் என்பதில்லை
வாக்குமாறா வேதம் கூறும் வார்த்தை யாவும் நிறைவேறும்
நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் - அல்

Start Downloading Your Apps