ஆரும்‌ துணை இல்லையே

ஆரும்‌ துணை இல்லையே, எனக்‌
காதியான்‌' திருப்பாலா;-உன்தன்‌
ஐந்து காயத்தின்‌ அடைக்கலம்‌ கொடுத்‌
தாளுவாய்‌, யேசுநாதா.

சீர்‌ உலாவு பூங்காவில்‌ ஓர்‌ கனி
தின்ற பாதகம்‌ மாற்றவே,
சிலுவை மீதினில்‌ உயிர்விடும்‌
தேவனே, என்‌ சுவாமி. - ஆரும்‌

சரணங்கள்‌

1. முந்து மானிடர்‌ தந்த தீவினை முழுவதும்‌ அறவேண்டியே,
முள்முடியுடன்‌ குருசில்‌ ஏறிய முன்னவா, கிருபை கூர்வையே;
சிந்தும்‌ உன்‌ உதிரத்தில்‌ என்‌ வினை தீர்த்திரட்சியும்‌, ஐயனே;
தீயபாவி எனக்கு வேறொரு செயலிடம்‌ துணை இல்லையே! - ஆரும்‌

2. தந்தை தாயரும்‌, மைந்தர்‌ மாதரும்‌ சகலரும்‌ உதவார்களே;
சாகும்நாளதில்‌ நீ அலால்‌ எனைத்‌ தாங்குவார்களும்‌ உண்டுமோ?
சொந்தம்‌ நீ எனக்கன்றி, வேறொரு சொந்தமானவர்‌ இல்லையே,
சுற்றமும்‌, பொருள்‌ அத்தமும்‌ முழபத்தமே என்‌ தத்தனே! - ஆரும்‌

3. கள்ளனாயினும்‌ வெள்ளனாயினும்‌ பிள்ளை நான்‌ உனக்‌ கல்லவோ?
கர்த்தனே, வலப்‌ பக்கமேவிய கள்ளனுக்‌ கருள்‌ செய்தையே;
தள்ளி என்னைவிடாமல்‌ உன்னடி தந்து காத்தருள்‌, அப்பனே.
தயவாய்‌ ஒரு குருசில்‌ ஏறிய சருவ ஜீவ தயா பரா. - ஆரும்‌

4. நன்றி அற்றவனாகிலும்‌ எனைக்‌ கொன்று போடுவதாகுமோ?
நட்டமே படும்‌ கெட்ட மைந்தனின்‌ கிட்ட ஓடினதில்லையோ?
கொன்றவர்க்‌ கருள்‌ செய்யும்‌ என்று பிதாவை நோக்கிய
கொற்றவா,குற்றம்‌ ஏது செய்தாலும்‌ நீ, எனைப்‌ பெற்றவா,
பொறுத்தாள்வையே. - ஆரும்‌

5. பத்தியேதும்‌ இலாது மாய சுகத்தை நாடிய பித்தனாய்ப்‌
பாழிலே என்றன்‌ நாள்‌ எலாங்‌ கெடுத்‌ தேழையாகினேன்‌
என்செய்வேன்‌? சத்ருவான பிசாசினால்‌ வரும்‌
தந்திரம்‌ கொடிதல்லவோ? தஞ்சம்‌ அற்றவன்‌ ஆகினேன்‌,
உன தஞ்சல்‌” கூறும்‌ அனாதியே. - ஆரும்‌

- வேதநாயகம்‌ சாஸ்திரியார்‌

Start Downloading Your Apps