ஆதி பராபரனின் சுதனே

1. ஆதி பராபரனின் சுதனே, கிறிஸ்தேசுநாதா - இந்த
அறிவில்லா யூதர்க்காய் ஐயனை வேண்டினீர் - யேசுநாதா

2. பாடு படுத்து வோர்க்கோ நீர் மன்னிப்பீந்தீர் - யேசு நாதா
இந்தப் பாவியாம் என் பாவப் பாரம் பெரிதல்லோ - யேசு நாதா

3. யூதரிலும் பொல்லாப் பாதகரானோமே - யேசுநாதா
மன யூகமுற்று முழுத் துரோகம் செய்தோமல்லோ - யேசு நாதா

4. அறிந்து மதிகமாய்ப் பாவங்கள் செய்தோமே - யேசுநாதா
அவை அத்தனையும் பொறுத்தருளும் கிருபையால் - யேசுநாதா

5. அன்புமிகும் வல்ல ஆண்டவரே கிறிஸ்து - யேசுநாதா
இனி ஆகாதோனாய்க் காணேன் ஆணைகள் செய்கின்றேன் - யேசுநாதா

6. மற்றவர் குற்றத்தை யாமும் மன்னித்திட - யேசுநாதா
நல்ல வாஞ்சையளித்து வரங்கள் புரிந்தருள் - யேசுநாதா

7. பரதேசிகளெம்மை அரவணையும் கிறிஸ்து - யேசுநாதா
திருப்பாதம் பணிந்து மன்றாடுகிறோம் கிறிஸ்து - யேசு நாதா

Start Downloading Your Apps