யேசுவின் ரத்தத்தில் நானும்

1. யேசுவின் ரத்தத்தில் நானும்
நம்பிக்கை வைக்கக் கூடுமோ?
எனக்காய் மரித்தவர்க்கு
என்னிமித்தமே பாடுகள்
அற்புத அன்பு ஆச்சரியம்
என் தேவன் எனக்காய் மாண்டார்.

2. கல்வாரியின் சிலுவையில்
மரித்தாரே என் ஆண்டவர்;
இவ்வன்பின் ரகசியத்தை
யார் கண்டு உணரக்கூடும்?
காருண்யரை துதித்திடுவோம்
இவ்வன்பரை நாம் போற்றுவோம்.

3. விண் சிங்காசனத்தை விட்டு
ஆதாமின் வீழ்ந்த மாந்தர்காய்;
தம்மையே வெறுமையாக்கி.
இரத்தம் சிந்தினார் யேசு.
தாராளமான அன்பினால்
இப்பாவி என்னையும் கண்டார்.

4. பாவத்தில் கட்டப்பட்டோனாய்
இருளில் மூழ்கியிருந்தேன்
உம் முகத்தின் பிரகாசத்தால்
மெய் அறிவை கண்டடைந்தேன்
என் கட்டுகள் விழுந்திட,
எழுந்து உம்மைப் பின் சென்றேன்.

5. ஆக்கினைத் தீர்ப் பெனக்கில்லை:
என் யேசு எனக்குச் சொந்தம்.
அவராலே பிழைத்திட்டேன்;
நீதியின் ஆடை தரித்தேன்.
தைர்யமாய் அவர் முன் நிற்பேன்:
வாடாத க்ரீடம் பெறுவேன்.

Start Downloading Your Apps