கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே

1. கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே
கருத்துடன் துதிப்போம் இனிய நாமமதை
கடலின் ஆழம்போல் கருணையாடிரக்கம்
கரையில்லை அவரன்பு கரையற்றதே

பல்லவி

இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
இயேசுவைப் போல் வேறோர் நேசரில்லையே

2. கொடுமையோர் சீறல் பெருவெள்ளம் போல
அடிக்கையில் மோதியே மதில்களின் மீதே
பெலனும் இவ்வேழைக்கும் எளியோர்க்கும் தினாய்
வெயிலுக்கும் ஒதுங்கும் விண் நிழலுமானார்- இயேசு

3. போராட்டம் சோதனை நிந்தை அவமானம்
கோரமாய் வந்தும் கிருபையில் நிலைக்க
தேவ குமாரனின் விசுவாசத்தாலே நான்
ஜீவித்து சேவிக்கத் திடமளித்தார்- இயேசு

4. கல்லும் முள்ளுகளுள்ள கடின பாதையிலே
கலக்கங்கள் நெருக்கங்கள் அகமதை வருத்த
எல்லையில்லா எதிர் எமக்கு வந்தாலும்
வல்லவர் இயேசு நம்முன் செல்கிறார் - இயேசு

5. சீயோனில் சிறப்புடன் சேர்ந்திட இயேசு
சீக்கிரம் வரும் நாள் நெருங்கி வந்திடுதே
முக முகமாகவே காண்போமே அவரை
யுக யுகமாகவே வாழ்ந்திடுவோம். - இயேசு

Start Downloading Your Apps