தேவனைத் துதிப்பதும்

தேவனைத் துதிப்பதும்
கீர்த்தனம் பண்ணுகிறதும் - நல்லது

சரணங்கள்

1. எருசலேமைக் கட்டியே கரிசனையாய்க் காக்கிறார்
துரத்துண்ட இஸ்ரவேலரைக் கரத்தால் கூட்டிச் சேர்க்கிறார்- தேவனை

2. இருதயம் நொறுங்குண்டோர்களை இவரே குணாமாக்குகிறார்
நறுங்குண்டோர் காயங்களை அருமையாய்க் கட்டுகிறார் - தேவனை

3. நட்சத்திரங்களின் இலக்கத்தை அட்சயன் எண்ணுகிறார்
பட்சமாய் அவைகளை உச்சரித்தழைக்கிறார்- தேவனை

4. ஆண்டவர் பெரியவர் மீண்டும் பெலமுள்ளவர்
அறிவில் அளவில்லாதவர் நெறியில் தவறாதவர் - தேவனை

5. சாந்தகுண முள்ளோர்களை வேந்தன் உயர்த்துகிறார்
மாந்தரில் துன்மார்க்கரை அகாந்தமாய்த் தாழ்த்துகிறார்- தேவனை

Start Downloading Your Apps