இயேசு ஸ்வாமி உமது

இயேசு ஸ்வாமி, உமது
வசனத்தின் பாலைத் தேட
வந்தோம்; எங்கள் மனது
மண்ணைவிட்டு உம்மைச் சேர,
எங்கள் சிந்தையை நீர் முற்றும்
தெய்வ சொல்லுக்குட்படுத்தும்

2. உமதாவி யெங்களில்
அந்தகாரத்தை அறுத்து
ஒளியை வீசாராகில் ,
புத்திக் கண்ணெல்லாம் இருட்டு;
சீர் உண்டாக்கும் நற்சிந்திப்பு
உம்முடைய நடப்பிப்பு .

3. மகிமையின் ஜோதியே,
ஸ்வாமி , நாங்கள் மாயமற
பாடிக் கெஞ்சி, நெஞ்சிலே
வசனத்தைக் கேட்டுணர,
வாய் செவி மனமும் கண்ணும்
திரவுண்டுபோகப் பண்ணும்.

Start Downloading Your Apps