ஆ அம்பர உம்பரமும்‌ புகழுந்திரு

ஆ! அம்பர உம்பர மும்‌ புகழுந்திரு
ஆதிபன்‌ பிறந்தார்‌

ஆதிபன்‌ பிறந்தார்‌,-அமலாதிபன்‌' பிறந்தார்‌. - ஆ!

சரணங்கள்‌

1. அன்பான பரனே!-அருள்‌ மேவுங்‌ காரணனே!-நவ
அச்சய சச்சிதா-ரட்சகனாகிய
உச்சிதவரனே! - ஆ!

2. ஆதம்‌ பவமற,-நீதம்‌ நிறைவேற,-அன்று
அல்லிராவினில்‌ -தொல்லையிடையினில்‌
புல்லணையிற்‌ பிறந்தார்‌. - ஆ!

3, ஞானியர்‌ தேட,-வானவர்‌ பாட,-மிக
நன்னய, உன்னத-பன்னரும்‌ மேசையா
இந்நிலம்‌ பிறந்தார்‌. - ஆ!

4. கோனவர்‌ நாட, தானவர் கொண்டாட-என்று
கோத்திரர்‌. தோத்திரஞ்‌-சாற்றிட வே, யூத
கோத்திரன்‌ பிறந்தார்‌. - ஆ!

5. விண்ணுடு தோண,-மன்னவர்‌ பேண,-ஏரோது,
மைந்தனின்‌ சிந்தையழுந்திக்‌ கலங்கிட
விந்தையாய்ப்‌ பிறந்தார்‌. - ஆ!

- யோ. யாக்கோப்பு‌

Start Downloading Your Apps