என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே

1. என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே;
உம் பாதத்தண்டை நிற்கிறேன்;
திக்கற்ற பிள்ளை கெஞ்சவே,
தள்ளாமல் சேர்த்துக் கொள்ளுமேன்.

2. என் கிரியைகள் எம்மாத்திரம்?
பிரயாசை எல்லாம் விருதா;
உம்மாலேயே மெய்ப் பாக்கியம்
உண்டாகும் நேச ரட்சகா.

3. உந்தன் சரீரம் ரத்தமும்
மெய்ப் பொருள் என்று அறிவேன்;
உட்கொண்டன்பாய் அருந்தவும்,
நான் பரவசமாகுவேன்.

4. மாசற்ற திரு ரத்தத்தை
கொண்டென்னைச் சுத்திகரியும்;
மா திவ்விய ஜீவ அப்பத்தை
என் நெஞ்சத்தில் தந்தருளும்.

5. என் நாதா உம் சரீரமே
மேலான திவ்விய போஜனம்;
மாசற்ற உந்தன் ரத்தமே
மெய்யான பான பாக்கியம்.

Start Downloading Your Apps