நன்றியால் துதிபாடு நம்

நன்றியால் துதிபாடு - நம் இயேசுவை
நாவாலே என்றும் பாடு
வல்லவர் நல்லவர் போதுமானவர்
வார்த்தையில் உண்மையுள்ளவர் - நன்றி

1. எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
இயேசு உந்தன் முன்னே செல்கிறார்
கலங்கிடாதே திகைத்திடாதே
துதியினால் இடிந்து விழும்- நன்றியால்

2. துன்மார்க்கத்திற்கேதுவான வெறி கொள்ளாமல்
தெய்வ பயத்தோடு என்றுமே
ஆவியினால் என்றும் நிறைந்தே
சங்கீத கீர்த்தனம் பாடு - நன்றியால்

3. சரீரம் ஆத்துமா ஆவியினாலும்
சோர்ந்து போகும் வேளையிலெல்லாம்
துதி சத்தத்தால் உள்ளம் நிறைந்தால்
தூயரின் பெலன் கிடைக்கும் - நன்றியால்


Start Downloading Your Apps