எந்தன் இயேசு கைவிடமாட்டார்

எந்தன் இயேசு கைவிடமாட்டார்
என்னை மறந்திட மாட்டார்
அல்லேலுயா (2) ஆர்ப்பரிப்போமே
அல்லேலூயா (2) அகமகிழ்வோமே

1. நிந்தனை போராட்டத்தில்
நேசர் என்னைத் தாங்கினார்
சோதனை வந்த போதெல்லாம்
தப்பிச் செல்ல வழி காட்டினார்- அல்லேலூயா

2. கடந்ததை மறக்கின்றேன்
கண் முன்னால் என் இயேசுதான்
காத்திருந்து பெலன் அடைந்து
கழுகைப் போல் எழும்பிடுவேன் - அல்லேலூயா

3. ஆயிரம் துன்பம் வந்தாலும்
அச்சம் எனக்கில்லையே
அரணும் கோட்டையும் அவர்
அத்தனையும் தகர்த்திடுவாரே - அல்லேலூயா

4. சீக்கிரம் வரப் போகின்ற
நேசருக்காய் காத்திருப்பேன்
எரியும் விளக்கேந்துவேன்
இயேசுவின் பின் நடப்பேன் - அல்லேலூயா

Start Downloading Your Apps