எத்தனை திரள்‌ என்‌ பாவம்‌

எத்தனை திரள்‌ என்‌ பாவம்‌, என்‌ தேவனே!
எளியன்மேல்‌ இரங்கையனே

நித்தம்‌ என்‌ இருதயம்‌ தீயதென்‌ பரனே;
நிலைவரம்‌ எனில்‌ இல்லை; நீ என்‌ தாபரமே - எத்தனை

சரணங்கள்‌

1. பந்தம்‌ உன்மேல்‌ எனக்கில்லை என்பேனோ?
பணிந்திடல்‌ ஒஓழிவேனோ?
சுத்தமுறுங்‌ கரம்கால்கள்‌, விலாவினில்‌
தோன்றுது காயங்கள்‌, தூய சிநேகா! - எத்தனை

2. என்றன்‌ அநீதிகள்‌ என்‌ கண்கள்‌ முனமே
இடைவிடாதிருக்கையிலே,
உன்றன்‌ மிகுங்‌ கிருபை, ஓ! மிகவும்‌ பெரிதே
உத்தம மனமுடையோய்‌, எனை ஆளும்‌! - எத்தனை

3. ஆயங்‌ கொள்வோன்போல்‌, பாவ ஸ்திரீபோல்‌,
அருகிலிருந்த கள்ளன்போல்‌,
நேயமாய்‌ உன்‌ சரண்‌ சரண்‌ என வணங்கினேன்‌;
நீ எனக்காகவே மரித்தனை, பரனே! - எத்தனை

4. கெட்ட மகன்போல்‌ துட்டனாய்‌ அலைந்தேன்‌,
கெடு பஞ்சத்தால்‌ நலிந்தேன்‌;
இட்டமாய்‌ மகன்‌ எனப்‌ பாத்திரன்‌ அல னான்‌,
எனை ரட்சித்திடல்‌ உன்றன்‌ நிமித்தமே, அப்பனே! - எத்தனை

- அருள்திரு. த. பலவேந்திரம்‌

Start Downloading Your Apps