களிப்புடன் கூடுவோம்

1. களிப்புடன் கூடுவோம்,
கர்த்தரை நாம் போற்றுவோம்;
அவர் தயை என்றைக்கும்
தாசரோடு நிலைக்கும்.

2. ஆதி முதல் அவரே
நன்மை யாவும் செய்தாரே;
அவர் தயை என்றைக்கும்
மாந்தர் மேலே சொரியும்.

3. இஸ்ரவேலைப் போஷித்தார்,
நித்தம் வழி காட்டினார்;
அவர் தயை என்றைக்கும்
மன்னா போலே சொரியும்.

4. வானம் பூமி புதிதாய்ச்
சிஷ்டிப்பாரோ ஞானமாய்;
அவர் தயை என்றைக்கும்
அதால் காணும் யாருக்கும்.

Start Downloading Your Apps