உலகில்‌ பவப்‌ பாரத்தால்

உலகில்‌ பவப்‌ பாரத்தால்‌ சோரும்‌-இளைப்‌
பூர்ந்த நரரே, வந்து சேரும்‌.

அலைசடிப்‌ பட்டவரே, வாரும்‌,-என்றன்‌
ஆறுதலால்‌ அவற்றைத்‌ தீரும்‌;-பொல்லா - உலகில்‌

சரணங்கள்‌

1. பாவி என்றெண்ணித்‌ திகைப்‌ போரும்‌,-என்றன்‌
பாவம்‌ தீராதென்‌ றிருப்‌ போரும்‌,
ஆவலாய்‌ ஓடி வந்து சேரும்‌;-நான்‌
ஆகாமியர்க்காக வந்த தோரும்‌;-பொல்லா - உலகில்‌

2. இளமை என்றே எண்ணி, நில்லாதே;-சாவும்‌
இளமை என்று சொல்லிச்‌ செல்லாதே;
வளமாய்‌ வருவதைத்‌ தள்ளாதே;-கெட்ட
வழக்க மிதையே கைக்‌ கொள்ளாதே.-பொல்லா - உலகில்‌

3. வாலிப ப்ராய மிதில்‌ நாளும்‌-இன்ப
வாழ்வு சுகிக்கவென்று மாளும்‌
சீலரே, இன்றென்‌ னுரை கேளும்‌;-அவை
சேர்க்கும்‌ நரகத்தில்‌ எந்நாளும்‌,-பொல்லா - உலகில்‌

4. காலம்‌ கடந்த கிழவோரே,-வீணாய்க்‌
காலம்‌ கழித்தே உழல்வோரே,
காலமே தேட மறந்தாரே,-உங்கள்‌
கவலையைத்‌ தீர்ப்பேன்‌, அறிவீரே.-பொல்லா - உலகில்‌

- ஏசுதாசன்‌ சவிராயன்‌

Start Downloading Your Apps