ஆண்டவரின்‌ நாமமதை ஈண்டு

ஆண்டவரின்‌ நாமமதை ஈண்டு போற்றுவேன்‌;-அவர்‌
ஆளுகையின்‌ நீதி அன்பின்‌ வாழி' சாற்றுவேன்‌. - ஆண்ட

2. உத்தம வழியில்‌ நிதம்‌ புத்தி கொள்ளுவேன்‌;-மன
உண்மையுடன்‌ வாழ்ந்து தீய கன்மம்‌” தள்ளுவேன்‌. - ஆண்ட

3. கெட்ட விஷயங்கள்‌ எனை ஒட்டுவதில்லை-மதி
கேடரின்‌ புரளிகளும்‌ கிட்டுவதில்லை. - ஆண்ட

4. வஞ்சகங்களை உகக்கும்‌? நெஞ்சை நீக்குவேன்‌;-பொல்லா
மார்க்கங்களிலே நடக்கும்‌ தீர்க்கம்‌ போக்குவேன்‌. - ஆண்ட

5. மற்றவனை ஏசி வாயால்‌ குற்றங்கள்‌ செய்யும்‌-துஷ்ட
மாந்தர்‌ மேலே பற்றாமலென்‌ பாந்தவம்‌” நையும்‌. - ஆண்ட

6. பொய்யர்களை என்னுடனே உய்ய ஒட்டேனே;-மகா
புரளிசெய்யும்‌ எத்தர்களின்‌ திரளில்‌ கிட்டேனே. - ஆண்ட

7. சீருடையோர்‌ பேரில்‌ அன்பு கூருவேனே;-நல்ல
சீரொழுகு சான்றோர்‌ தயை சேருவேனே. - ஆண்‌

- த. யோசேப்பு

Start Downloading Your Apps