மூலைக் கல் கிறிஸ்துவே

1. மூலைக் கல் கிறிஸ்துவே,
அவர் மேல் கட்டுவோம்;
அவர் மெய் பக்தரே
விண்ணில் வசிப்போராம்;

அவரின் அன்பை நம்புவோம்
தயை பேரின்பம் பெறுவோம்.

2. எம் ஸ்தோத்ரப் பாடலால்
ஆலயம் முழங்குவோம்;
ஏறிடும் எம் நாவால்
திரியேகர் துதியும்;

மா நாமம் மிக்கப் போற்றுவோம்
ஆனந்தம் ஆர்க்கப் பாடுவோம்.

3. கிருபாகரா, இங்கே
தங்கியே கேட்டிடும்,
மா ஊக்க ஜெபமே
பக்தியாம் வேண்டலும்;

வணங்கும் அனைவோருமே
பெற்றிட ஆசி மாரியே.

4. வேண்டும் விண் கிருபை
அடியார் பெற்றிட;
பெற்ற நற்கிருபை
என்றென்றும் தங்கிட;

உம் தாசரைத் தற்காத்திடும்;
விண் நித்திய ஓய்வில் சேர்த்திடும்.

Start Downloading Your Apps