சமயமிது நல்லசமயம்‌ உமதாவி

சமயமிது நல்லசமயம்‌, உமதாவி
தரவேணுமே சாமி.

அமையுஞ்‌ சத்துவ,
அருள்ளானத்‌ துயிரின்றி
அமர்ந்து சேர்ந்தெழும்பா துறங்கிடும்‌
அடியன்மீ தனல்மூட்டி யுயிர்தர, - சமய

1. யேசுகிறிஸ்துவின்மேல்‌ நேசம்‌ பக்தியும்விசு
வாசம்‌ நம்பிக்கை சமாதானம்‌ மங்கிடலாச்சே;
வீசுங்கிரணத்தாவி நேசச்சுவாலைமூட்டி
மிஞ்சுஞ்சீவ நற்கனிகளீங்குமைக்‌
கெஞ்சுதாசனின்‌ மனதிலோங்கிட, - சமய

2. ஜெயமோதவமோ தேவதியானமோ வாஞ்சையோ
செய்யுஞ்சுயமுயற்சி தொய்யுங்‌ காரணமேனோ?
தவனம்‌ ஞானாமுதின்மேல்‌ சற்றுமில்லாததேனோ?
தந்தையேயுயிர்‌ தந்தென்னைத்தாங்கிட
உந்தயையினுற்‌ சாகநல்லாவியை, - சமய

3. ஓதும்‌ பிரசங்கமும்‌ ஓசைக்கைத்தாளம்போல
ஒலிக்குதல்லாமல்‌ பலன்‌ பலிக்குதில்லை, தாக்குள்‌
ஏதுமற்றிடும்‌ பள்ளத்தெலும்பு உயிர்த்தெழும்ப
எசேக்கியேலுரை வாக்கிலுயிரருள்‌
போக்கியே செய்த ஆவியே இங்ஙனம்‌. - சமய

4. பெந்தெகோஸ்தினில்‌ கூடிவந்த சீடரையன்று
உந்தனாவியினைப்‌ பொழிந்தபிஷேகஞ்செய்த
விந்தைபோலெமதிடம்‌ வந்தெம்‌ வேலைகள்முற்றும்‌
வேதனே உமதருளி னுயிர்பெறப்‌
பூதலர்‌ உமைப்‌ போற்றநின்‌ சேயராய்‌. - சமய

- அருள்திரு. வே. மாசிலாமணி

Start Downloading Your Apps