திருமுகத்‌ தொளிவற்று பெருவினை

திருமுகத்‌ தொளிவற்று; பெருவினைகளில்‌ உற்றுச்‌
சீர்கெட்ட பாவி ஆனேன்‌;-நான்‌
ஒரு முகமாய்‌ உனதிடம்‌ மனந்திரும்பிட,
ஊக்கம்‌ அருள்‌, பரனே.

2. துரிச்சையினால்‌ என்‌ அசுத்தம்‌ நிறைந்து நல்‌
சாபிதம்‌ நான்‌ இழந்தேன்‌;-பேய்ப்‌
பரீட்சையினாலும்‌ மயக்கம்‌ அடையும்‌ இப்‌
பாவிக்‌ கிரங்‌ கையனே.

3. பாதகர்‌ மீதில்‌ பரிதபியாமலும்‌,
பாவம்‌ பெறாமலும்‌ நீ-சுத்த
நீதியை நோக்கில்‌, உனது சமூகத்தில்‌
நிற்பவர்‌ ஆர்‌, துய்யனே?

4. தன்‌ புண்ணி யத்தால்‌ எவனும்‌ மன்னிப்புறத்‌
தக்கவன்‌ இல்லை மெய்யாய்‌;-எந்தை!
உன்‌ தயையால்‌ உன்‌ திருச்சுதன்‌ மூலமாய்‌
உண்டு பொறுப்‌ பெனக்கே.

5. மண்ணையே நோக்கி உழன்று தவிக்கும்‌ என்‌
வஞ்சக நெஞ்சதனை-நேராய்‌
விண்ணையே நோக்கிடப்‌ பண்‌, இறைவா; உனை
வேண்டி மன்றாடுகின்றேன்‌.

6. மாறுபாடான இவ்‌ வேழைக்கிரங்கி நீ
மன்னிப்பருள்‌ வதன்றி,-எனக்‌
காறுதலாக உனது நல்‌ ஆவியை
அனுக்கிரகித்தாள்‌, பரனே.

- யோ. பால்மர்‌

Start Downloading Your Apps