நினையேன்‌ மனம்‌ நினையேன்

நினையேன்‌, மனம்‌, நினையேன்‌ தினம்‌
உனை மீட்ட யேசுவையே.

கன மேவிய மனு வேலனைக்‌ கன
காசன சுதனை. -நினை

சரணங்கள்‌

1. கவன முடன்‌ நீடி, உனக்‌ காக அருள்‌ தேடிப்‌,
புவன மதில்‌ பிறந்து திவ்ய புதுமை மிகச்‌ சிறந்து,
தவனமுறு ஆத்மா ஜீவத்‌ தண்ணீர்‌ உண, சும்மா
பவம்‌ நீக்கிய வானாசனப்‌ பதியை, சுரர்‌ கதியை. - நினை

2. நரக அழலாலே கெடு நாசம்‌ வந்த காலே
உருகி, மனம்‌ இரங்கித்‌, தொலைத்‌ துண்மையுடன்‌ இணங்கி,
பரமனோடு உறவாக்கி, மெய்ப்பலனும்‌ பெறத்‌ தாக்கி,
பெருக நலம்புரிந்தோன்‌, மறை பேதம்‌ இன்றி அறைந்தோன்‌.
- நினை

3. ஜெயமும்‌, புத்ர சுவிகாரமும்‌, சிறந்த நீதியும்‌, மகா
நயந்த பரிசுத்தம்‌ தேவ ஞானமுடன்‌ மீட்பும்‌
சுயமாக்கியும்‌ அளித்தும்‌ தனதுயிரைப்‌ பலிகொடுத்தும்‌
பயன்‌ ஏலவே', தூய ஆவியைப்‌ பரிந்தோனையே கனிந்தே.
- நினை

- ஆ. அல்லின்‌

Start Downloading Your Apps