அதி மங்கல காரணனே

அதி - மங்கல காரணனே
துதி - தங்கிய பூரணனே - நரர்‌
வாழ விண்‌ துறந்தோர்‌ ஏழையாய்ப்‌ பிறந்த
வண்மையே தாரணனே! - அதி

சரணங்கள்‌

1. மதி - மங்கின எங்களுக்கும்‌
திதி - சிங்கினர்‌' தங்களுக்கும்‌ - உனின்‌
மாட்சியும்‌,” திவ்விய காட்சியும்‌ தோன்றிட
வையாய்‌ துங்கவனே! - அதி

2, முடி - மன்னர்கள்‌ மேடையையும்‌,
மிகு - உன்னத வீடதையும்‌ - எண்ணா
மாட்டிடையே பிறந்‌ தாட்டிடையர்‌ தொழ,
வந்தனையோ தரையில்‌? - அதி

3. தீய- பேய்த்திரள்‌ ஓடுதற்கும்‌,
உம்பர்‌ - வாய்திரள்‌ பாடுதற்கும்‌, - உனைப்‌
பின்பற்றுவோர்‌ முற்றும்‌ துன்பற்று வாழ்வதற்கும்‌
பெற்ற நல்‌ கோலம்‌ இதோ? - அதி

Start Downloading Your Apps