என் தேவனே என் அன்பனே

என் தேவனே என் அன்பனே
வந்திடுவீர் வல்லமையாய்

அனுபல்லவி

ஆசீர்வாத நிறைவுடன்
அன்பே என் மேல் இறங்கிடும்

சரணங்கள்

1. இரண்டோ மூன்றோ பேர்கள் எங்கே
உண்டோ அங்கே நானிருப்பேன்
என்றுரைத்த வாக்கின்படி
இன்றும் எம்மைச் சந்தித்திடும் - என் தேவனே

2. கல்வாரியில் ஜீவன் தந்த
எங்கள் தேவா இயேசு நாதா
எங்கள் உள்ளம் உந்தன் அன்பால்
நிறைந்தும்மைத் துதித்திட - என் தேவனே

3. அந்தோ ஜனம் பாவங்களால்
நொந்து மனம் வாடுதையோ
இன்ப முகம் கண்டால் போதும்
இருள் நீங்க ஒளி காண்பார்- என் தேவனே

4. ஆதரவாய் அன்றுன் கரம்
நீட்டி சுகம் ஈந்த தேவா
ஆவலுடன் வந்தோர் பிணி
யாவும் தீரும் அருள் நாதா- என் தேவனே

5. ஆதி அன்பால் தேவ ஜனம்
தாவி மனம் மகிழ்ந்திட
ஆவி ஆத்மா சரீரமும்
பரிசுத்தம் அடைந்திட- என் தேவனே

6. ஆவலுடன் உம் வரவை
எதிர் நோக்கிக் காத்திருக்க
ஆவி வரம் யாவும் பெற்று
நிறைவுடன் இலங்கிட - என் தேவனே

Start Downloading Your Apps