போற்றித் துதிப்போம் எம்

1. போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை
புதிய இதயமுடனே
நேற்றும் இன்றும் என்றும் மாறா
இயேசுவை நாம் என்றும் பாடித் துதிப்போம்

பல்லவி

இயேசு என்னும் நாமமே
என் ஆத்துமாவின் கீதமே
என் நேசர் இயேசுவை நான்
என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன்

2. கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில்
காக்குங் கரம் கொண்டு மார்பில்
சேர்த்தணைத்த அன்பை என்றும் பாடுவேன் - இயேசு

3. யோர்தான் நதி போன்ற சோதனையிலும்
சோர்ந் தமிழ்ந்து மாளாதே
ஆர்க்கும் ஜெய தொனியோடே
பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன்- இயேசு

4. தாய்தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால்
தாழ்த்தி என்னை அவர் கையில் தந்து
ஜீவபாதை என்றும் ஓடுவேன் - இயேசு

5. பூமியகிலமும் சாட்சியாகவே
போங்களென்ற கட்டளையதால்
ஆவி ஆத்துமாவும் தேகம் யாவும் இன்று
தந்து தொண்டு செய்குவேன் - இயேசு

Start Downloading Your Apps