பாவி மனதுருகே

பாவி, மனதுருகே!

ஆ வீட்டில்‌ ஏர்‌ காட்டு தேவாட்டுக்குப்‌ - பாவி

சரணங்கள்‌

1. மாது தின்ற கனிவினை போக, மனுடர்‌ வடிவமாக - நம்‌
வல்லமைப்‌ பிதாவின்‌ மைந்தன்‌ புல்லதில்‌ பிறந்தார்‌; அந்தோ!
- பாவி

2. வேத வாசகப்படி நெறிகாட்ட, வேதாளக்குடி ஓட்ட,-இதோ!
வித்தகத்‌ திரித்துவ ஏகத்‌ தத்துவ சொரூபன்‌ வந்தார்‌.- பாவி

3. விந்தைத்‌ திருமுதல்‌ நரர்‌ உர உவந்தார்‌,
கந்தைத்‌ துணி அணிந்தார்‌; - இப்படி
மெத்தனவ! ராகக்‌ கரி சித்துனைப்‌ புரக்க வந்தார்‌. - பாவி

4. மேட்டிமையைத்‌ துறந்தார்‌, காட்டினிடை சிறந்தார்‌.
மேன்மை அனைத்தும்‌ மறந்தார்‌; - இந்த
விந்தைக்‌ கோலத்‌ துன்னைக்‌ கண்டு சந்திக்க வந்திருக்கிறார்‌.
- பாவி

5. நெரிந்த நாணலை முறியார்‌, பொரிந்த திரியை அவியார்‌
நிர்ப்பந்தர்‌ தமைப்பிரியார்‌; - இவர்‌
நீதிமான்களை அல்ல, உன்னைப்போல்‌ பாதகரைத்‌ தான்‌ தேடி
வந்தார்‌ - பாவி

- வேதநாயகம்‌ சாஸ்திரியார்‌

Start Downloading Your Apps