சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்

சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
திரியேக நாதனுக்குச் சுபமங்களம்

அனுபல்லவி

பாரேறு நீதனுக்கு, பரமபொற் பாதனுக்கு
நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு- சீர்

சரணங்கள்

1. ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
அகிலப் பிர காசனுக்கு நேசனுக்கு மங்களம்
நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்கு
ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு - சீர்

2. மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
வளர் கலைக்கியானனுக்கு, ஞானனுக்கு மங்களம்
கானான் நல் தேயனுக்கு கன்னிமரி சேயனுக்கு
கோனார் சகாயனுக்கு கூறு பெத்தலேயனுக்கு - சீர்

3. பத்து லட்ச ணத்தனுக்கு சுத்தனுக்கு மங்களம்
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதிகாரனுக்கு
பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு - சீர்

Start Downloading Your Apps