எங்கே சுமந்து போகிறீர்‌

எங்கே சுமந்து போகிறீர்‌? சிலுவையை நீர்‌
எங்கே சுமந்து போகிறீர்‌?

சரணங்கள்‌

1. எங்கே சுமந்து போறீர்‌? இந்தக்‌ கானலில்‌ உமது
அங்கம்‌ முழுதும்‌ நோக, ஐயா, என்‌ ஏசுநாதா - எங்கே

2. தோளில்‌ பாரம்‌ அழுத்த, தூக்கப்‌ பெலம்‌ இல்லாமல்‌
தாளுந்‌ தத்தளிக்கவே, தாப சோபம்‌ உற, நீர்‌ - எங்கே

3. வாதையினால்‌ உடலும்‌ வாடித்‌ தவிப்புண்டாக,
பேதம்‌ இல்லாச்‌ சீமோனும்‌ பின்னாகத்‌ தாங்கிவர - எங்கே

4. தாயார்‌ அழுதுவர சார்ந்தவர்‌ பின்‌ தொடர,
மாயம்‌ இல்லாத ஞான மாதர்‌ புலம்பி வர - எங்கே

5. வல்ல பேயைக்‌ கொல்லவும்‌, மரணந்தனை வெல்லவும்‌,
எல்லை இல்லாப்‌ பாவங்கள்‌ எல்லாம்‌ நாசமாகவும்‌ - எங்கே

6. மாசணுகாத சத்திய வாசகனே, உமது
தாசர்களைக்‌ காக்கவும்‌ தாங்காச்‌ சுமையை எடுத்து- எங்கே

- ஏசுதாசன்‌ அண்ணாவியார்‌

Start Downloading Your Apps