பவனி செல்கின்றார்‌ ராசா

பவனி செல்கின்றார்‌ ராசா-நாம்‌
பாடிப்‌ புகழ்வோம்‌, நேசா!

அவனிதனிலே மறிமேல்‌ ஏறி
ஆனந்தம்‌ பரமானந்தம்‌. - பவனி

சரணங்கள்‌

1. எருசலேமின்‌ பதியே -சுரர்‌
கரிசனையுள்ள நிதியே!
அருகில்‌ நின்ற அனைவர்‌ போற்றும்‌
அரசே, எங்கள்‌ சிரசே! - பவனி

2, பன்னிரண்டு சீஷர்‌ சென்று-நின்று
பாங்காய்‌ வஸ்திரம்‌ விரிக்க,
நன்னயம்சேர்‌ மனுவின்‌ சேனை
நாதம்‌ கீதம்‌ ஓத. - பவனி

3. குருத்தோலைகள்‌ பிடிக்க,-பாலர்‌
கும்பு கும்பாகவே' நடக்க,
பெருத்த தொனியாய்‌ ஓசன்னாவென்று
போற்ற மனம்‌ தேற்ற. - பவனி

- சு. முத்துசுவாமி

Start Downloading Your Apps