பாவியாகவே வாறேன்‌ பாவம்‌

பாவியாகவே வாறேன்‌; பாவம்‌ போக்கும்‌
பலியாம்‌ என்‌ யேசுவே, வாறேன்‌.

சரணங்கள்‌

1. பாவக்கறை போமோ என்‌ பாடால்‌? உன்‌ பாடாலன்றிப்‌
போவதில்லை என்றே பொல்லாத பாவியே நான்‌ -பாவி

2. நீ வா, உன்‌ பாவம்‌ என்னால்‌ நீங்கும்‌ என்று சொன்னீரே;
தேவா, உன்‌ வாக்கை நம்பி, சீர்கேடன்‌ நீசனும்‌ நான்‌ -பாவி

3. பேய்மருள்‌ உலகுடல்‌ பேராசையால்‌ மயங்கிப்‌
போயும்‌ அவற்றோடு போரில்‌ அயர்ச்சியாய்‌ நான்‌ -பாவி

4. ஜீவ செல்வ ஞான சீல சுகங்கள்‌ அற்றேன்‌,
தாவென்று வேண்டிய சாவில்‌ சஞ்சரித்த நான்‌ -பாவி

5. துன்பங்கள்‌ நீக்கி உன்னைத்‌ தூக்கி அணைப்பேன்‌ என்றீர்‌;
இன்ப வாக்குத்தத்தத்தை இன்றைக்கே நம்பியே நான்‌ -பாவி

6. உன்னைச்‌ சேர ஒட்டாமல்‌ ஊன்றிய தடை யாவும்‌
உன்னன்பால்‌ நீங்கி நல்‌ உயிர்‌ அடைந்தோங்கவே நான்‌ -பாவி

- ஏ. வெய்‌

Start Downloading Your Apps