தந்தானைத்‌ துதிப்போமே திருச்‌

தந்தானைத்‌ துதிப்போமே;-திருச்‌
சபையாரே, கவி-பாடிப்பாடி.

விந்தையாய்‌ நமக்கனந்தனந்தமான,
விள்ளற்கரியதோர்‌ நன்மை மிக மிகத்‌ - தந்தானைத்‌

சரணங்கள்‌

1. ஒய்யாரத்துச்‌ சீயோனே,-நீயும்‌
மெய்யாகக்‌ களிகூர்ந்து நேர்ந்து,
ஐயனேசுக்குனின்‌ கையைக்‌ கூப்பித்‌ துதி
செய்குவையே, மகிழ்‌ கொள்ளுவையே, நாமும்‌ - தந்தானைத்‌

2. கண்ணாரக்‌ களித்தாயே,-நன்மைக்‌
காட்சியைக்‌ கண்டு ருசித்துப்‌ புசித்து;
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமுன்மேற்‌ சோனா மாரிபோற்‌ பெய்துமே. - தந்தானைத்‌

3. சுத்தாங்கத்து நற்சபையே,-உனை
முற்றாய்க்‌ கொள்ளவே அலைந்து திரிந்து
சத்துக்‌ குலைந்துனைச்‌ சத்தியாக்கத்‌ தம்மின்‌
ரத்தத்தைச்‌ சிந்தி எடுத்தே உயிர்‌ வரம்‌. - தந்தானைத்‌

4. தூரம்திரிந்த சயோனே-உனைத்‌
தூக்கியெடுத்துக்‌ கரத்தினிலேந்தி,
ஆரங்கள்‌ பூட்டி அலங்கரித்து நினை
அத்தன்‌ மணவாட்டி யாக்கினது என்னை! - தந்தானைத்‌

5. சிங்காரக்‌ கன்னிமாரே,-உம்‌
அலங்காரக்‌ கும்மி அடித்துப்‌ படித்து,
மங்காத உம்‌ மணவாளன்‌ யேசுதனை
வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப்‌ பணிந்திடும்‌. - தந்தானைத்‌

- அருள்திரு. வே. மாசிலாமணி

Start Downloading Your Apps