காலத்தின்‌ அருமையை அறிந்து

காலத்தின்‌ அருமையை அறிந்து வாழாவிடில்‌
கண்ணீர்‌ விடுவாயே.

ஞாலத்தில்‌ பரனுன்னை நாட்டின நோக்கத்தைச்‌
சீலமாய்‌ நினைத்தவர்‌ மூலம்‌ பிழைத்திடுவாய்‌ - கால

சரணங்கள்‌

1. மதியை யிழந்துதீய வழியிலே நீ நடந்தால்‌
வருங்கோபம்‌ அறிந்திடாயோ?
கதியாம்‌ ரக்ஷண்ய வாழ்வை கண்டு நீ மகிழ்ந்திட
காலம்‌ இதுவே நல்ல காலம்‌ என்றறியாயோ? - கால

2. இகத்தினில்‌ ஊழியம்‌ அகத்தினில்‌ நிறைவேற
ஏசுனை அழைத்தாரல்லோ?
மகத்துவ வேலையை மறந்து தூங்குவாயானால்‌
பகற்கால முடியும்‌ ராக்காலத்திலென்ன செய்வாய்‌? - கால

3. நோவாவின்‌ காலத்தில்‌ நூற்றிருபது ஆண்டு
நோக்கிப்பின்‌ அழித்தாரன்றோ?
தாவாத' கிருபையால்‌ தாங்கி உனக்களித்த
தவணையின்‌ காலமிவ்‌ வருட முடியலாமே - கால

4. முந்தின எரேமியா அனனியாவுக்‌ குரைத்த
முடிவை நீ அறியாயோ?
எந்தக்‌ காலமும்‌ சிரஞ்சீவியென்றெண்ணிடாமல்‌
ஏற்ற ஆயத்தமாய்‌ எப்போதும்‌ இருந்திடாயோ? - கால

- அருள்திரு. சா. பரமானந்தம்‌

Start Downloading Your Apps