வெள்ளை அங்கிகள்‌ தரித்த

வெள்ளை அங்கிகள்‌ தரித்த
விமல முத்தர்‌ இவர்‌ யார்‌?

கள்ள மில்லா ஆட்டுக்குட்டிக்‌
கருணைவள்ளல்‌ முன்றிற்கும்‌. - வெள்ளை

சரணங்கள்‌

1. நானாதிக்கிலுமிருந்து
நயந்து வந்தவர்‌ இவர்‌;
கோணாது துன்பக்‌ கடலில்‌
குளித்துவந்தவர்‌ இவர்‌. - வெள்ளை

2. குருத்‌ தோலைகள்‌ பிடித்துக்‌
கொற்றவனைச்‌ சூழநிற்கும்‌
பெருத்த கூட்டத்தார்‌ இவர்‌;
பேரன்பின்‌ அடியார்களாம்‌. - வெள்ளை

3. ஆட்டுக்‌ குட்டியாலே மீட்பை
அடைந்த உத்தமர்‌ இவர்‌;
தேட்டமுடனே" நாயனைச்‌
சேவித்து நிற்கின்றார்‌ நித்தம்‌. - வெள்ளை

4. பசிதாகம்‌ யாவுமற்றார்‌;
பாக்கிய நிலைமை பெற்றார்‌;
உச்சித மோட்சத்தின்‌ கண்ணீர்‌
உகுக்கா வாழ்வினை யுற்றார்‌. - வெள்ளை

- ல. ஸ்தேவான்‌

Start Downloading Your Apps