உன்னையன்றி வேறே கெதி

உன்னையன்றி வேறே கெதி
ஒருவரில்லையெ ஸ்வாமீ!

அன்னை தந்தை உற்றார்‌ கற்றார்‌-ஆருமுதவுவரோ?
அதிசய மனுவேலா!-ஆசை என்‌ யேசு ஸ்வாமீ! - உன்‌

சரணங்கள்‌

1. பண்ணின துரோகமெல்லாம்‌-எண்ணினா லெத்தனைகோடி,
பாதகத்துக்‌ குண்டோ எல்லை,-பரிதவித்தேனே தேடி,
கண்ணினாலுன்‌ திருவடிக்‌-காண நான்‌ தகுமோதான்‌?
கடையனுக்கருள்புரி-மடியுமுன்‌ யேசு ஸ்வாமீ! - உன்‌

2. அஞ்சியஞ்சித்‌ தூர நின்றென-சஞ்சலங்களை நான்‌ சொல்லி,
அலைகடல்‌ துரும்புபோல்‌-மலைவு கொண்டே னானையோ!
கெஞ்சிக்‌ கெஞ்சிக்‌ கூவுமிந்த-வஞ்சகன்‌ முகம்பாராய்க்‌
கிட்டி என்னிடம்‌ சேர்ந்து-க்ருபைவை யேசு ஸ்வாமீ! - உன்‌

3. எத்தனை கற்றாலும்‌ தேவ-பக்தியேது மற்ற பாவி;
எவ்வளவு புத்திகேட்டும்‌-அவ்வளவுக்கதி தோஷி,
பித்தனைப்‌ போல பிதற்றிக்‌-கத்தியே புலம்புமேழைப்‌
பேதையைக்‌ கடைத்தேற்றிப்‌-பிழைக்கவை யேசு ஸ்வாமீ - உன்‌

4. கள்ளனாம்‌ கபடனென்னைத்‌-தள்ளிவிட்டா லாவதென்ன,
கல்லைப்போல்‌ கடினங்கொண்ட-கர்ம சண்டாளன்‌ பாழும்‌
உள்ளமுங்கரைந்தே உன்னறன்‌-உயர்‌ சிலுவையினன்பால்‌
உலையிலிட்ட மெழுகாய்‌-உருகவை யேசு ஸ்வாமீ! - உன்‌

- வே.ஐ. பென்யமின்‌

Start Downloading Your Apps