வர வேணும்‌ என தரசே

வர வேணும்‌, என தரசே,
மனுவேல்‌, இஸரேல்‌ சிரசே.

அருணோ தயம்‌ ஒளிர்‌ பிரகாசா,
அசரீரி ஒரே சர வேசா! - வர

சரணங்கள்‌

1. வேதா, கருணா கரா, மெய்யான பரா பரா,
ஆதார நிராதரா, அன்பான சகோ தரா,
தாதாவும்‌ தாய்‌ சகலமும்‌ நீயே;
நாதா, உன்‌ தாபரம்‌ நல்குவாயே. - வர

2. படியோர்‌? பவ மோசனா, பரலோக சிம்மாசனா,
முடியா தருள்‌ போசனா, முதன்‌ மா மறை வாசனா,
இடையர்‌ குடிலிடை மேவி எழுந்தாய்‌,
இமையவர்‌ அடி தொழு மேன்மையின்‌ எந்தாய்‌, - வர

3. வானோர்‌ தொழும்‌ நாதனே, மறையாகம போதனே,
கானாவின்‌ அதீதனே', கலிலேய வினோதனே,
ஞானாகரமே, நடு நிலை யோவா,
நண்பா, உனத நன்மையின்‌ மகாதேவா! - வர

- வேதநாயகம்‌ சாஸ்திரியார்‌

Start Downloading Your Apps