சேர்‌ ஐயா எளியேன்‌ செய்‌ பவ

சேர்‌, ஐயா; எளியேன்‌ செய்‌ பவ வினை
தீர்‌, ஐயா.

சரணங்கள்‌

1. பார்‌, ஐயா, உன்‌ பதமே கதி;-ஏழைப்‌
பாவிமேல்‌ கண்‌ பார்த்திரங்கி,-எனைச்‌ - சேர்‌

2. தீதினை உணர்ந்த சோரனைப்‌-பர
தீசிலே அன்று சேர்க்கலையோ?-எனைச்‌ - சேர்‌

3. மாசிலா கிறிஸ்‌ தேசுபரா,-உனை
வந்தடைந்தனன்‌; தஞ்சம்‌, என்றே-எனைச்‌ - சேர்‌

4. தஞ்சம்‌ என்றுனைத்‌ தான்‌ அடைந்தோர்‌-தமைத்‌
தள்ளிடேன்‌ என்று சாற்றினையே;-எனைச்‌ - சேர்‌

5. பாவம்‌ மா சிவப்பாயினும்‌,-அதை
பஞ்செனச்‌ செய்வேன்‌, என்றனையே;-எனைச்‌ - சேர்‌

6. தீயர்க்காய்ப்‌ பிணையாய்‌ மரித்த-யேசு
தேவனே, கருணாகரனே,-எனைச்‌ - சேர்‌

- யோ. பால்மர்‌

Start Downloading Your Apps