சருவ வலிமை கிருபைகள்‌ மிகுந்த

சருவ வலிமை கிருபைகள்‌ மிகுந்த சருவேசா!
தரிசனம்‌ பெறஉன்‌ சன்னிதி புகுந்தேன்‌-திருவாசா

2. தூயசிந்தை உண்மையில்‌ உனையே, தொழுதேத்த!
தூய ஆவி கொண்டெனை நிரப்பும்‌ - ஐகதீசா!

3. இருதயத்தைச்‌ சிதற விடாமல்‌ ஒருநேராய்‌
இசைத்தமைத்துப்‌ பரவசமாக்கும்‌ - நசரேயா!

4. அருளின்‌ வாக்கைக்‌ கருத்துடன்‌ கேட்டு அகத்தேற்று
அறுபது நூறு முப்பதாய்ப்‌ பெருக - அருளீசா!

- அருள்திரு. ஜி. சே. வேதநாயகம்‌

Start Downloading Your Apps