உனக்கொத்தாசை வரும்‌ நல்‌ உயர்

உனக்கொத்தாசை வரும்‌ நல்‌ உயர்‌ பருவதம்‌,-இதோ!

தினமும்‌ மனது நொந்து சிந்தை கலங்குவோனே. - உன

1. வானம்‌ புவி திரையும்‌” வகுத்த நன்மைப்‌ பிதாவின்‌
மாட்சிமையின்‌ கரமே வல்லமையுள்ள தல்லோ? - உன

2. காலைத்‌ தள்ளாடவொட்டார்‌, கரத்தைத்‌ தளரவொட்டார்‌;
மாலை உறங்கமாட்டார்‌, மறதியாய்ப்‌ போக மாட்டார்‌. - உன

3. கர்த்தருனைக்‌ காப்பவராம்‌, கரமதில்‌ சேர்ப்பவராம்‌;
நித்தியம்‌ உன்றனுக்கு நிழலாயிருப்பவராம்‌. - உன

4. பகலில்‌ வெயிலெனிலும்‌, இரவில்‌ நிலவெனிலும்‌,
இகல்‌ தருவதுமில்லை, இன்னல்‌ செய்வதுமில்லை. - உன

5. தீங்கு தொடராதுன்னை, தீமை படராதுன்மேல்‌;
தாங்குவார்‌ தூதர்‌ கோடி, தாளிடறாதபடி. - உன

6. போக்கும்‌ ஆசீர்வாதமாம்‌, வரத்தும்‌ ஆசீர்வாதமாம்‌;
காக்கைக்‌ குஞ்சுகள்‌ முதல்‌ கதறி நம்பிவிடுமே. - உன

7. துன்ப துயரத்திலும்‌ துக்க சமயத்திலும்‌,
இன்பமுறும்‌ பொழுதும்‌ எல்லாம்‌ உனக்கவரே. - உன

- பாளையங்கோட்டைப்‌ பாடல்‌

Start Downloading Your Apps