ஏற்றுக்கொண்டருளுமே தேவா

ஏற்றுக்கொண்டருளுமே, தேவா!-இப்போ
தேழையேன்‌ ஜெபத்தை இயேசுவின்‌ மூலம்‌.

சரணங்கள்‌

1. சாற்றின ஆதி ஆயத்த ஜெபமும்‌,
சாந்தமாய்‌ ஜெபித்த பாவ அறிக்கையும்‌,
தேற்றிக்கொண்டருளும்‌ மன்னிப்பின்‌ மருவும்‌
திவ்விய பாதத்தில்‌ வைக்கிறேன்‌, ஸ்வாமி -ஏற்று

2. குறைவுண்டு இதிலே, அருமைப்‌ பிதாவே,
குற்றம்‌ மன்னித்திடும்‌ யேசுவின்‌ மூலம்‌;
முறைப்படி கேட்க நான்‌ தெரியாத பாவி;
முழுதும்‌ மேசையாமேல்‌ வைக்கிறேன்‌, ஸ்வாமி. -ஏற்று

3. மறுரூப ஆவி வேண்டுமென்‌ ஸ்வாமி;
மனமெல்லாம்‌ புதிதாக்கிடும்‌ ஸ்வாமி,
சிறுமைப்பட்‌ டடியேன்‌, கேட்கிறேன்‌ ஸ்வாமி;
தேற்றிடும்‌, புது பெலன்‌ ஊற்றிடும்‌, ஸ்வாமி. -ஏற்று

4. விசுவாசம்‌ பெருகி நிலைத்திடச்‌ செய்யும்‌;
வெளிப்படும்‌ மறைபொருள்‌ பலப்படச்‌ செய்யும்‌;
சிசுவைப்போல்‌ மறுபடி பிறந்திடச்‌ செய்யும்‌;
தேவாவி என்னுளந்‌ தங்கிடச்‌ செய்யும்‌. -ஏற்று

- அருளாந்தம்‌

Start Downloading Your Apps